ஆராதனை தேவனே அப்பா ஆராதனை செய்கிறோம் (2)
துதித்து கழி கூறுவோம் நாம் மகிழ்ந்து வரவேற்கிறோம் (2)
ஆராதனை தேவனே அப்பா ஆராதனை செய்கிறோம்
பிதாவினை அழைத்து நாங்கள் துதிதனை செலுத்திடுவோம்
நாள்தோறும் பாடிடுவோம்(2)
வல்லவரின் வல்லமையை என்றென்றும் மறவோமே(2)
எங்களுக்காய் சிந்தினார் இரத்தம் எங்களுக்காய் சிந்தினார்
ஆராதனை தேவனே அப்பா ஆராதனை செய்கிறோம்...
மனம் திரும்பும் வேதமதை எங்களுக்காய் தந்தவரை
இயேசுவை நாம் பாடுவோம்(2)
துதியினால் ஆராதிப்போம் மகிமைதனை பாடிடுவோம் (2)
எங்களுக்காய் சுமந்தாரே சிலுவை எங்களுக்காய் சுமந்தாரே
ஆராதனை தேவனே அப்பா ஆராதனை செய்கிறோம்...
அன்பும் கிருபையும் இரக்கமும் நிறைந்த வரை
ஆவியை நாம் அழைப்போம்(2)
எங்களை வழி நடத்தும் தூய ஆவியாரை (2)
உம்மையே போற்றுகிறோம் என்றும் மனதார வாழ்த்துகிறோம்(2)
ஆராதனை தேவனே அப்பா ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா அல்லேலூயா
பாடல் : பாஸ்டர் திவாகர்-பிரான்ஸ்
(CEO OF JESUS LIFE GOD TV)
0 Comments